புதுடெல்லி:
கோவா மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு டெல்லிமுதலமைச்சரும்,ஆம்ஆத்மிஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
மார்ச் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 11-ம் தேதிக்குள் காங்கிரஸில் இருந்து அனைவரும் பாஜகவில் சேருவார்கள்.எனவே பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கோவா மக்கள், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரசுக்க நீங்கள் அளிக்கும் வாக்கு வீணாகி, பாஜகவுக்குத்தான் போகும். உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு அளிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் கோவாவில் 10 ஆண்டுகளாக சுரங்க தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியை தேர்வு செய்தால் ஆறு மாதத்தில் சுரங்கத் தொழிலைத் தொடங்குவோம்.
உத்தரகாண்ட் மக்களுக்கு, ஆம் ஆத்மி போதுமான வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் என்று நான் தெரிவிக்க விரும்புகிறேன். இதனால் (தொழிலாளர்கள்) இடப் பெயர்வுகள் நிறுத்தப்படும்.
இங்கு வசிக்கும் இளைஞர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் போதுமான வேலை வாய்ப்பை உருவாக்குவோம். அவர்கள் அனைவரையும் திரும்பக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கோவா மற்றும் உத்தரகாண்ட் மக்களை சுரண்டி வருகின்றன.அவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால், அவர்கள் உங்களை கொள்ளையடித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.