தென்னிலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரவாதி பெண்ணொருவரை கொழும்புக்கு அழைத்து வந்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சோதிட ஆலோசனை சொல்லும் மந்திரவாதி பெண்ணை கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்ட ஞானக்கா பிரபல ஹோட்டல் ஒன்றில் உள்ள அழகுக்கலை நிலையத்திற்கு சென்றிருந்தார்.
5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான அழகு கலை நிலையத்திற்கே அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இது தொடர்பான செய்திகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சையில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் சிக்கியுள்ளார்.
இராணுவத்தின் உயர் அதிகாரத்திலுள்ள ஒருவரே ஞானக்காவை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு தேவையான உதவிகளை செய்துள்ளதாக வார இறுதி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உட்பட அவரின் அனைத்து விசுவாசிகளும் ஞானக்கா தீவிர பக்கத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.