கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம்ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘‘தொல்லியல் துறை சார்பில் இந்த கோயிலில் ரூ. 3 கோடிசெலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் உள்ளிட்டவசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.புராதனச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கோயிலில் புதியகட்டுமானங்களை உரிய அனுமதியின்றி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்’’ என கோரி யிருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறையின் அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 38 மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், தொல்லியல் துறை சட்ட விதிகளின்படி, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும். தனது விதிகளையே தொல்லியல்துறை காற்றி்ல் பறக்கவிட்டுள்ளது.எனவே இந்த கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத்தடை விதித்துஉத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்தவழக்கில் விதிமீறலுக்கு யார் காரணம் என்பது குறித்து தொல்லியல் துறை 2 வாரங்களில் பதிலளிக்க வேண் டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.