இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்து 44 ஆயிரத்து 877 ஆக பதிவாகி உள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதித்த 684 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 3 புள்ளி 17 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 5 லட்சத்து 37 ஆயிரத்து 45 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.