சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்: முதல்வர் அதிர்ச்சி!

நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விடும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக எந்த எல்லைக்கு செல்ல அக்கட்சி தயங்குவதில்லை. ஒன்று தங்களது கட்சி ஆட்சி செய்ய வேண்டும் அல்லது தங்களது கூட்டணியில் உள்ள சொல்பேச்சு கேட்கும் கட்சி ஆட்சி செய்ய வேண்டும். மாறாக, வேறு கட்சிகள் ஆட்சி செய்தால், அம்மாநிலத்துக்கு பல்வேறு குடைச்சல்களை மத்திய பாஜக அரசு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய குடைச்சல்களை ஆளுநர்களை வைத்து அக்கட்சி அரங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு,
மேற்குவங்கம்
, கேரளா ஆகிய பாஜகவுக்கு சிம்மசொப்பமனமாக இருக்கும் மாநிலங்களில் கால் ஊன்றி விட பாஜக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்குவங்க அரியணையை பிடித்து விடலாம் என்று பாஜக திட்டமிட்டது. ஆனால், மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, தனது எதிர்கால திட்டங்களும் அம்மாநிலத்தை பாஜக அணுகி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவையை
ஆளுநர் ஜக்தீப் தங்கர்
முடக்கியுள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 174 வது பிரிவின் பிரிவு (a) ன் உட்பிரிவு (2) மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநரான ஜக்தீப் தங்கர், ஆகிய நான் மேற்குவங்க சட்டமன்றத்தை பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன்.” என்று ஜக்தீப் தங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், னது கையெழுத்திட்ட உத்தரவையும் அவர் இணைத்த்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்வரவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து
மம்தா பானர்ஜி
அரசு பரிசீலித்து வந்த நிலையில், மேற்குவங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்தி வைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக ஆளுநரின் அனுமதியின்றி மேற்கு வங்க சட்டப்பேரவையை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றம் கூட வேண்டுமானால் ஆளுநரின் அனுமதியோடு, அவரது உரையோடு மட்டுமே கூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை ஆளுநர் சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுத்தால், பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது அரசின் செயல்பாடுகளை பாதிக்கும். மேலும் ஆளுநரின் இந்த உத்தரவு, அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் என கருத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.