Tamil News Today LIVE: நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும் – எல்.முருகன்

Petrol Price update: 101-ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tamilnadu News Update:  தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எம்.பி. கனிமொழி உறுதியளித்தார்.

India News Update: உத்தரப் பிரதேசத்தில் நாளை 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 55 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Corona update:  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41.05 கோடியை தாண்டியது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்:

அமெரிக்கா  –   7,92,93,924

இந்தியா   – 4,26,14,910

பிரேசில்   –  2,74,25,743

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Live Updates

11:29 (IST) 13 Feb 2022
நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும் – எல்.முருகன்

நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும்; நதிநீர் இணைப்பு திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம். நாடு முழுவதும் 200 கல்வி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன; கல்வி தொலைக்காட்சிகளில் சிறந்த கல்வியாளர்கள் மூலம் பாடம் நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.


11:23 (IST) 13 Feb 2022
ஈபிஎஸ் பகல் கனவு நிச்சயம் பலிக்காது: சேகர் பாபு

தமிழக சட்டப்பேரவையை முடக்க நினைக்கும் ஈபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சு மூலம் தெரியப்படுத்தியுள்ளார். முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


10:53 (IST) 13 Feb 2022
பொய் வாக்குறுதி அளித்தது திமுக: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.


10:46 (IST) 13 Feb 2022
ஆப்கனில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் லேசான நில அதிர்வு நேற்று இரவு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆகப் பதிவானது.


10:39 (IST) 13 Feb 2022
இந்தியாவில் மேலும் 44,877 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 44,877 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


10:32 (IST) 13 Feb 2022
வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பு

போடி நகராட்சி 5ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் செல்வி, முருங்கைக்கீரை மற்றும் மாஸ்க் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


10:17 (IST) 13 Feb 2022
சட்டமன்றம் முடக்க நேரிடும் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்க நேரிடும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்


10:12 (IST) 13 Feb 2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 5 லட்சம் பூத் ஸ்லிப் விநியோகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 5,54,187 பூத் ஸ்லிப் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


9:49 (IST) 13 Feb 2022
கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை தேர்தல்

கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


9:42 (IST) 13 Feb 2022
சேலத்தில் முன்னாள் முதல்வர் பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் ஓமலூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.


9:32 (IST) 13 Feb 2022
நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள செயற்கைக்கோள்

புவி கண்காணிப்புக்காக வடிவமைத்துள்ள இஓஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5 மணி 59 நிமிடத்திற்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


9:10 (IST) 13 Feb 2022
திண்டுக்கல்: முதல்வர் காணொலி மூலம் பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் காணொலி வாயிலாக பிரசாரம் செய்யவுள்ளார்.


8:57 (IST) 13 Feb 2022
அமெரிக்கா: பனியில் உறைந்த நீர்வீழ்ச்சி

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா நகரில் உள்ள சியோக்ஸ் நீர்வீழ்ச்சி, பனியில் முழுமையாக உறைந்தது!


8:44 (IST) 13 Feb 2022
எம்பிபிஎஸ் வகுப்புகள் நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை தொடக்கவுள்ளது.


8:38 (IST) 13 Feb 2022
ஐபிஎல்: இன்று 2-ஆவது நாள் ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம் 2வது நாளாக இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. முக்கிய வீரர்களான ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இன்று ஏலத்தில் எடுக்கப்படுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.


8:35 (IST) 13 Feb 2022
நெல்லை உவரி அந்தோணியார் ஆலய திருத்தலப் பெருவிழா

நெல்லையில் உவரி அந்தோணியார் ஆலய திருத்தலப் பெருவிழாவில் தமிழக, கேரள பக்தர்கள் குவிந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.