மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைத்து அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் பிறப்பித்த உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசின் பரிந்துரைப்படியே கூட்டத் தொடரை ஒத்திவைத்ததாக மாநில ஆளுநர் ஜகதீஷ் தங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட மேற்கு வங்க ஆளுநர், அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனால், மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க ஆளுநரின் செயல் அந்த பதவிக்குரியவரிடம் இருந்து எதிர்பாராதது என்றும் நிர்மாணிக்கப்பட்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். மாநிலத்தின் தலைவராக அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அரசியல் சாசன விதிகளைக் காப்பதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளிப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>The act of <a href=”https://twitter.com/hashtag/WestBengal?src=hash&ref_src=twsrc%5Etfw”>#WestBengal</a> Governor to prorogue the WB Assembly Session is without any propriety expected from the exalted post and goes against the established norms and conventions. (1/2)</p>— M.K.Stalin (@mkstalin) <a href=”https://twitter.com/mkstalin/status/1492740367371759617?ref_src=twsrc%5Etfw”>February 13, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிட்டதாக அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவை இணைத்து அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிறைவடைந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்க இம்மாதம் 11ஆம் தேதி மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும் ஜகதீஷ் தங்கர் விளக்கமளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM