இந்நிலையில், நியூசிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மட்டும் 623 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதேபோல், வைகாடோவில் 81 பேருக்கும், தலைநகர் வெலிங்டனில் 15 பேருக்கும், தெற்கு பிராந்தியத்தில் 14 பேருக்கும், நார்த்லேண்டில் 13, பே ஆஃப் பிளெண்டி- லேக்ஸ் பிராந்தியத்தில் தலா 11, ஹட் பள்ளத்தாக்கு- ஹாக்ஸ் விரிகுடாவில் தலா 8, வாங்கனுய்யில் 6, தாரனகியில் 5, தைராவிட்ட, கேன்டரப்ரி மற்றும் மத்திய பிராந்தியத்தில் தலா 3 பேருக்கும், நெல்சன் மார்ல்பரோ மற்றும் தெற்கு கேன்டர்பரியில் தலா இரண்டு என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 32 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் யாரும் சிகிச்சையில் இல்லை எ ன்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,887 பேருக்கு கொரோனா