இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய நாளை காட்டிலும் 13.4 சதவீதம் குறைவாகும். மொத்த பாதிப்பு 4,26,31,421 ஆனது.
அதேபோல், 1,17,591 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,15,85,711 ஆனது. தற்போது, 5,37,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தொற்று காரணமாக 684 பேர் உயிரிழந்ததால், மொத்த இறப்பு 5,08,665 ஆனது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.