ஷிவமொகா : இரண்டு வெவ்வேறு துக்க சம்பவங்களால், இரண்டு திருமணங்கள் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டன.மணமகளின் பாட்டி, மணமகனின் தந்தை இறந்ததால் இந்த முடிவுக்கு அந்தந்த குடும்பத்தினர் வந்தனர்.ஷிவமொகாவின் பத்ராவதி அருகே உள்ள, அந்தரகங்கே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாராயணபுராவை சேர்ந்த வாலிபருக்கும், இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக, இரு வீட்டாரும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
ஆனால், 10ல் மணமகளின் பாட்டி இறந்து விட்டதால், திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல, பத்ராவதி அருகே உள்ள உஜ்ஜனிபுராவை சேர்ந்த போரே கவுடா என்பவரது மகனுக்கு, கடந்த 10ல் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், முந்தைய நாளில், போரே கவுடா மாரடைப்பால் உயிரிழந்தார்.இதனால், அந்த திருமணமும் தள்ளி வைக்கப்பட்டது. ஒரே வாரத்தில், பத்ராவதியில் பாட்டி மற்றும் தந்தை மரணங்களால், இரண்டு திருமணங்கள் நின்று போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷிவமொகா : இரண்டு வெவ்வேறு துக்க சம்பவங்களால், இரண்டு திருமணங்கள் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டன.மணமகளின் பாட்டி, மணமகனின் தந்தை இறந்ததால் இந்த முடிவுக்கு அந்தந்த குடும்பத்தினர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.