நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யின் பொது பங்கு வெளியீடு (IPO) விரைவில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பாப்புகள் நிலவி வருகின்றது.
இதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏற்கனவே இதற்கான அனுமதியினை IRDAI அனுமதி கொடுத்துள்ளது.
3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..!
இதற்கிடையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு செபிக்கு (SEBI) விண்ணப்பித்துள்ளது.
எதிர்பார்ப்பு
இதன் மூலம் 5% பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பங்கு வெளியீடானது மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபிக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி( DRHP), எல்ஐசியின் 31 கோடிக்கும் அதிகமான பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபம் ட்வீட்
இது குறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை செயலாளர், துஹின் காந்தா பாண்டே தனது ட்வீட்டர் பக்கத்தில் செய்துள்ளார். அதில் எல்ஐசி-யின் DRHP அறிக்கையானது இன்று செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
OFS விற்பனை மட்டும் தான்
இந்த பங்கு வெளியீட்டில் அரசிடம் உள்ள பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன. இதில் புதிய வெளியீடு என்பது இல்லை. இந்த பங்கு வெளியீட்டில் 10% வரை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இதில் பாலிசிதாரர்களுக்கு, பங்கு வெளீயீட்டில் சில சலுகைகள் கூட இந்த பங்கு வெளியீட்டில் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
எதிர்பார்ப்பு
இந்த பங்கு வெளியீட்டினை டெலாய்ட் மற்றும் எஸ்பிஐ கேப்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு முந்தைய ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பங்கு வெளியீடானது விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
LIC IPO filed with SEBI, to sell 5% stake in India’s biggest insurer
LIC IPO filed with SEBI, to sell 5% stake in India’s biggest insurer/LIC IPO-வுக்கான ஆவணங்கள் செபியிடம் சமர்பிப்பு.. விரைவில் குட் நியூஸ் வரலாம்..!