விழுப்புரத்தில் அக்கா தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், 5 நாள் ஆன நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் கேகே சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரமிளா (52) சுசீந்திரன் (50). அக்காள் தம்பியான இருவரும், சினிமா துணை நடிகையிடன் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து வறுமை காரணமாக விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த இவர்கள் திடீரென இறந்த செய்தி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிபடி அழுகிய நிலையில் இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட கடிதத்தில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. வறுமை காரணமாகவே தாங்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM