சென்னை
கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை. மேலும் புறந்கர் ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது. சமீபத்தில் சில வாரங்களாகத் தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது.
தமிழக அரசு இதனால் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்ரும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு மேலும் பல தளர்வுகள் அறிவிக்கபபட்டன. இதையொட்டி தெற்கு ரயில்வே ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அண்மையில் தளர்த்தியது.
தற்போது நாளை முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட அட்டவணையின் படி 100 சதவீதம் ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.