வாஷிங்டன் : “உக்ரைன் மீது போர் தொடுத்தால், அதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்,” என, ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது.
‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது.உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன.
ராணுவ வீரர்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன.இந்த பரபரப்பான சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.அதில், ரஷ்யா – உக்ரைன் இடையில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண விருப்பம் தெரிவித்த ஜோ பைடன், எந்த சூழல்நிலையையும் எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்தால் ஏராளமான மக்கள் உயிரிழக்கக்கூடும் என்றும், அதை மீறியும் போர் தொடுத்தால், அதற்கு ரஷ்யா உரிய விலை கொடுக்க நேரிடும் என்றும், புடினை, நேரடியாகவே பைடன் எச்சரித்தார்.ரஷ்ய படைகள் குவிப்புஉக்ரைனில் எந்த நேரமும் ரஷ்யா அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் எல்லையில் பெலாரஸ், கிரீமியாவில் எல்லையோர பகுதிகளில் மிகப் பெரிய அளவில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான, ‘சாட்டிலைட்’ படங்கள் வெளியாகி உள்ளன.இந்த பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள், கட்டடங்கள் அமைத்து, ரஷ்ய ராணுவம் முகாமிட்டுள்ளது.
பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் உட்பட பல தளவாடங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.பிரமாண்ட பேரணிரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து, உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏராளமான மக்கள் நேற்று பேரணி நடத்தினர். கைகளில் தேசியக்கொடியை ஏந்தியபடியும், தேசிய கீதத்தை பாடிய படியும் இவர்கள் பேரணிகளில் பங்கேற்றனர்.
‘உக்ரைனை நேசிக்கிறோம். ரஷ்யாவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம். உக்ரைன் அரசுக்கு ஆதரவாக இருப்போம்’ என, அவர்கள் கோஷமிட்டனர்.