தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 120 கிலோ எடைகொண்ட தங்கத்தாலான அவரது உருவச் சிலையை திறந்து வைத்தார்.
ராமானுஜர் போன்ற புனிதர்களும், தத்துவவாதிகளும் நாட்டின் கலாச்சார அடையாளத்தை உருவாக்கி பேணி பாதுகாத்து அது தொடர்வதையும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமையையும் உறுதி செய்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ராம்நாத் கோவிந்த், ராமானுஜரின் பக்தி மார்க்கம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் வாரணாஸி வரை பரவியிருப்பதை காணமுடியும் என கூறினார். எனவே இந்தியர்களின் மனரீதியான ஒற்றுமை பல நூற்றாண்டுகள் பழமையானது எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன் கடந்த 5ஆம் தேதி 216 அடி ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM