பாம்பே
“உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா” என அரவிந்த்சாமி, மனிஷாவிடம் படகில் கேட்கும் கேள்வி 90’ஸ் கிட்ஸின் விருப்பமான லவ் ப்ரோபோசல் சீன்.
அலைபாயுதே
“நான் உன்ன விரும்பல. உன் மேல ஆசைப்படல. நீ அழகா இருக்கனு நினைக்கல. ஆனால் இதுலா நடந்துடுமோனு பயமா இருக்கு” என மாதவன், ஷாலினியிடம் நகரும் ட்ரைனில் ப்ரபோஸ் செய்வது எவர்கிரீன் காட்சி.
மின்னலே
“இனிமேல் என்னால பொறுத்துக்க முடியாது ப்ளீஸ். உனக்கு என்ன பிடிச்சுருக்கானு சொல்லு” என நேரடியாகவே மாதவன், ரீமாவிடம் கேட்கிற காட்சிகள் பல ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்.
காக்க காக்க
“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும். உங்களோட என் வாழ்க்கைய வாழணும். உங்க தோள்ல சாஞ்சு அழணும். I want make love to you. இந்த கண்களை பார்த்துட்டே இருக்கணும்” என மாயா அன்புச் செல்வனிடம் தன் காதலைத் தெரிவிப்பது அதுவரையிலான காதல் ப்ரபோசல்களில் புதுமையானது. அழுத்தமானது.
சில்லுனு ஒரு காதல்
“கோபம் தான். நீ மட்டும் பார்க்க வேண்டிய உடம்பை மத்தவங்கள ஏன் பார்க்க விட்ட” என பூமிகா, சூர்யாவிடம் கேட்கிற காட்சி `முன்பே வா அன்பே வா’ என ரசிகர்களைக் காதலில் மூழ்க செய்தது.
பருத்தி வீரன்
“கள்ளுக் குடிச்சும் தூக்கமில்லை. கண்ணமூடுனா கனவுல நீதானே” என முத்தழகிடம் பருத்திவீரன் மனசைப் பறி கொடுத்து, `சாஞ்சுக்கலாம்ல’ என்றதும் தோளில் சாயும் முத்தழகும், பின்னணியில் ஒலிக்கும் யுவனின் இசையும் பலரது மனதை விட்டும் அகலாதவை!
வேட்டையாடு விளையாடு
“டூ மினிட்ஸ்லயே சொல்லிருப்பேன். நீ தப்பா நினைச்சுக்குற போறியேனுதான் இரண்டு மணிநேரம் பொறுத்துட்டு இருந்தேன்” என ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிசர் ராகவனை நெகிழ வைத்தது ஜிவிஎம் ஸ்டைல்.
விண்ணைத் தாண்டி வருவாயா
“உலகத்துல இருக்க எல்லா பொண்ணுகளையும் தங்கச்சியா ஏத்துக்குறேன், இனிமேல். உன்ன தவிர.” கார்த்திக்-ஜெஸ்ஸி காதலினால் பாதிக்கப்படாத தமிழ் ரசிகர்கள் யாரும் இல்லை.
ஆடுகளம்
“ஐ ஆம் லவ்விங் யூ” என கருப்பு சொல்வதை வேணா ப்ரோபோசலாக எடுத்துக்கலாம். `யாத்தே! யாத்தே!’ என மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க செய்த படம்.
வாரணம் ஆயிரம்
“ஹாய் மாலினி ஐ ஆம் கிருஷ்ணன்” ல ஆரம்பிச்சு “ஃபால் இன் லவ் வித் யூ மேக்னா”என சூர்யா சொல்வதாகட்டும் “எனக்கு 8 வயசு இருக்கும்போது நான் உன்ன முதல்ல பாத்தேன். அன்னைல இருந்துகூட இருக்கலாம்.” என பிரியா சொல்வது என அநேகமாக காதல் ப்ரபோசல்களின் கூடாரம் வாரணம் ஆயிரம்.
மொழி
“என்னை புரிஞ்சா என் இசையையும் புரிஞ்சுடும்” என ப்ரித்விராஜ் காதலையும் இசையையும் கடத்தும் ப்ரபோசல் சீன் தமிழ் சினிமாவில் புதுரகம்.
பிரேமம்
தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் அல்லாத படம் பிரேமம். மேரி ஜார்ஜ், மலர், செலின் என மூன்று காலங்கள். மூன்று காதல்கள். மலர் டீச்சர் இல்லாத வாட்ஸப் ஸ்டேட்டஸ் இனி ஒருபோதும் சாத்தியமில்லை.
OK Kanmani
“நான் உனக்கு கண்மணியா” எனக் கேட்கும் தாரா-ஆதி ஜோடி. லிவ்-இன் ரிலேசன்ஷிப், காதல், கல்யாணம், ஊடல்-கூடல் என எல்லாவற்றையும் பேசிய Coming Age படம், ஓகே கண்மணி.
96
நேரடியான ப்ரோபோசல் சீன்ஸ் இல்லைனாலும் ” ரொம்ப தூரம் போயிட்டீயா ராம்” எனக் கேட்கிற ஜானுவிடம் “உன்ன எங்க விட்டேனோ… அங்கயேதான் நிக்குறேன் ஜானு” என்பது தான் ராம்-ஜானுவின் காதல். மனசெல்லாம் பட்டாம்பூச்சிகள் பறக்க வாழ்த்துகள் மக்களே!