கோவையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை, சுகுணாபுரம் பகுதியில் உணவை சூடாக பராமரிக்கும் ஹாட் பாக்ஸுகளுடன் வந்த சரக்கு ஆட்டோவை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர், வாகனத்தை பறிமுதல் செய்தனர். காது குத்து விழாவிற்காக ஹாட் பாக்ஸ்கள் கொண்டு வரப்பட்டதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் இது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க திமுகவினர் முயற்சிப்பதாகக் கூறி, பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். திமுகவைச் சேர்ந்தவரின் வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM