Petrol and Diesel Price: சென்னையில் 102-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: தேர்தல் வாக்குறுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பொய் கூறுகிறார் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
முதல்வர் 80% பாஜக குறித்துதான் பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
India News Update: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 55 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. உ.பி.யில் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கோவாவில் 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதேபாேல் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி அருகே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
விண்ணில் ஏவப்பட்டது செயற்கைக்கோள்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV C-52 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-04 விண்ணில் ஏவப்பட்டது
Corona update: உலகளவில் இதுவரை 41.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 33.25 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.33 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
கர்நாடக மாநிலம் மாண்டியாவில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள், பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் சேர, பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு அறிவித்துள்ளார்.
2022ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுக்கு, விசாரணையில் சிறந்து விளங்கும் காவலர்களின் பெயர்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் பரிந்துரைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2021 நவம்பர் 14.87% மற்றும் டிசம்பர் மாதத்தில் 13.56% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜனவரி மாதம் 12.26% ஆக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது திமுக. மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று நாகர்கோவிலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் ரயில்வே நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம். விவசாயிகள் இன்று மாலை ரயில் மூலம் மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும் என்றும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் எதிர் மனுதாரர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கீழடி புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஹிஜாப் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து வந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்து ரூ. 37,496க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,687 ஆகும்.
பிரபல ஆன்லைன் வர்த்தக செயலியான அலிபாபா, டென்செண்ட்ம்m நெட் ஈஸ் உள்ளிட்ட மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 36 வது கட்ட விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். இதுவரை 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 1,042 பேர் ஆஜராகி உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார்.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தொடங்கியது. நேற்று காலை வெளியான அறிவியல் கேள்விகளை கொண்டு தேர்வு தொடங்கியது. புதிதாக கேள்விகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித மாற்றமும் இன்றி தேர்வு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கோவா மாநிலம், கோதம்பியில் உள்ள வாக்குச் சாவடியில் அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் வாக்கு செலுத்தினார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மிகச் சிறந்த ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வந்தது. இதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இல்லையெனில் காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைப் போல உத்தரப் பிரதேசம் ஆகிவிடும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
காலை 9 மணிக்குள் கோவாவில் 11 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 9 சதவீதமும், உத்தரகாண்டில் 5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 172.95 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 11,66,993 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
யார் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். 60-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வெல்லும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் கோவா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் (2-ஆம் கட்டத் தேர்தல்) ஆகிய மாநிலங்களில் வாக்களிக்கத் தகுதி கொண்ட அனைவரும் ஆர்வமுடன் முன்வந்து வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மூத்த குடிமக்கள் முதல் முதல் முறை வாக்காளர்கள் வரை, கோவா மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
தனது வாக்கை செலுத்திய பிறகு கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரண் பிள்ளை கூறுகையில், நியாயமான முறையில் தேர்தலை நடத்திவரும் தேர்தல் ஆணையத்துக்கும், ஒத்துழைப்பு அளித்துவரும் அரசியல் கட்சிகளுக்கும் பாராட்டுகள் என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
கோவா, உ.பி.யில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரகாண்டில் மட்டும் 8 மணிக்கு தொடங்கியது.
உத்தரப் பிரதேசத்தில் 300-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெல்லும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.
மறைந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் கோவா தலைநகர் பனாஜியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார். இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிட்டுள்ளார்.
வாக்கு சேகரிக்க காதலர்களை போல தனியாக செல்லுங்கள். கூட்டம் கூட்டமாக செல்லாதீர்கள் என்று அமைச்சர் துரை முருகன் திமுக வேட்பாளர்களிடம் நகைச்சுவையாக கூறினார்.
கிருஷ்ணகிரியில் காலணி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பங்கு வெளியீட்டிற்கான ஆவணங்களை செபியிடம் எல்.ஐ.சி சமர்ப்பித்தது. ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச தேர்தலில் 2.01 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
திருச்செந்தூர், திருப்பதிக்கு இணையாக மாற்றப்படும் என்றும் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்றும் அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் இன்று முதல் 100 சதவீதம் இயங்கும்.
வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.