சுவிட்சர்லாந்தில் பெருமளவில் குறைந்துள்ள கொரோனா தொற்று



சென்ற வாரத்தில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

157,683 பேர் புதிதாக சென்ற வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், முந்தைய வாரத்தை விட இந்த எண்ணிக்கை 24% குறைவு என தெரியவந்துள்ளது. முந்தைய வாரம் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 208,542 ஆகும்.

மருத்துவமனைகளில் முந்தைய வாரம் 518 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்ற வாரம் அந்த எண்ணிக்கையும் 5% குறைந்து 492 ஆகியுள்ளது.

அத்துடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. முந்தைய வாரம் 86 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், சென்ற வாரம் அந்த எண்ணிக்கையும் 19 % குறைந்து 70 ஆகியுள்ளது.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மட்டும், முந்தைய வாரம் 194 ஆக இருந்தது, சென்ற வாரம் 198 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.