கோவிட் "அலைகள் ஓய்வதில்லை".. அடுத்தடுத்து வரும்.. ஒழியாது.. விஞ்ஞானிகள்

கொரோனாவைரஸ்
பரவல் இப்போதைக்கு ஓயாது.. நிரந்தரமாக அது இருக்கவே வாய்ப்புள்ளது. அடுத்தடுத்து புதிய புதிய அலைகள் வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனாவைரஸ் பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. அடுத்தடுத்து 3 அலைகளை இந்தியா கண்டு விட்டது. பிற நாடுகளிலும் அடுத்தடுத்து அலைகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது
ஓமைக்ரான்
பரவல் உள்ளது. இந்தியாவில் இந்த பரவல் தற்போது தணிந்து வரும் நிலையில் ஓமைக்ரானோடு கொரோனா பேரிடர்காலம் முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் வேறு ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது கொரோனாவைரஸ் நிரந்தரமாக தங்கி விடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அடுத்தடுத்த வேரியன்ட்களுக்கு வாய்ப்பிருப்பதால் கொரோனா அலைகளும் ஓயாது என்பது இவர்களது கருத்தாகும்.

வாசலோடு நிறுத்தி… பர்தாவைக் கழற்றிய டீச்சர்.. கர்நாடகத்தில் மீண்டும் பரபரப்பு!

உலக நாடுகள் என்னதான் கொரோனா தடுப்பூசியை ஊக்குவித்தாலும் முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட கொரோனாவைரஸ் நிரந்தரமாக அழிய வாய்ப்பில்லை. அது நிரந்தரமாக நம்மோடு தங்கி விடும் வாய்ப்புகளே அதிகம் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய கூற்றாக உள்ளது. புதுப் புது வேரியன்ட்களுக்கும் அதிக வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து ஏல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோயியில் துறை பேராசிரியர் அகிகோ இவாசகி கூறுகையில், இந்த வைரஸ் தொடர்ந்து வீரியத்துடன்தான் இருக்கிறது. புதுப் புது வடிவம் எடுத்துக் கொண்டிருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசிகளின் திறன் குறித்து நாம் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் இந்த வைரஸ் வேறு ரூபத்திற்கு மாறிக் கொண்டிருக்கும். நாம் தொடர்ந்து வைரஸின் பரிணாமங்களை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது என்றார்.

ஆளுநர்களுக்கு எதிராக.. அணி திரளும் முதல்வர்கள்.. மமதா போடும் பலே பிளான்!

தற்போது தென் ஆப்பிரிக்காவில் பிஏ.2 என்ற புதிய வேரியன்ட் பரவிக் கொண்டுள்ளது. ஓமைக்ரானிலிருந்து உருவான வேரியன்ட் இது. இதுவும் வேகமாக பரவிக் கொண்டுள்ளது. இதில் என்ன கொடுமை என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயமும் இருக்கிறதாம். எனவே ஒரு தடவை வந்து சரியாகி விட்டால், அவ்வளவுதான் நாம் தப்பித்து விட்டோம், மறுபடியும் வராது என்று நிம்மதியாக இருக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.