டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவியின் தந்தை சிபிசிஐடி விசாரணையை மட்டுமே கோரிய நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்காக உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் கூறினார்.தமிழக அரசின் கருத்தை கேட்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரினர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு ஒரு கெளவுரவ பிரச்சனையாக பார்க்க வேண்டாம் என்று கூறினார்.வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் தமிழக அரசின் மனு குறித்து பதிலளிக்க மாணவியின் தந்தைக்கும் உத்தரவிட்டு வழங்கி 3 வாரத்திற்கு தள்ளிவைத்தனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு தங்களையும் இணைக்க கோரிய தூயஇருதய மேரி சபையின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.