குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.
இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை விநியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப விநியோகத்தை தடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக விநியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read: பாமக-வின் தலைவர் ஆகிறாரா அன்புமணி… புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுவில் வருகிறதா அறிவிப்பு..?!