நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில், நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குப்பை கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார் பாஜக வேட்பாளரொருவர்.
திருநெல்வேலி மாநகராட்சி 30வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மேகநாதன் வாக்குகளை கேட்டு இன்று வழக்கப்போல பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் துண்டுப்பிரசுரம் கொடுத்து `மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்துக்கு இடையே தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு மிகவும் அசுத்தமான சூழலில் இருப்பதைக் கண்டு அவர், உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் பேசுகையில், “நான் பிறந்ததிலிருந்து நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்து வருகிறேன். இந்தப் பகுதியில் மிகவும் அசுத்தமாக கழிவு நீர் ஓடைகள், குப்பைகள், கழிவுகள். மதுபான பாட்டில்கள் போன்றவை கிடக்கின்றது.
நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதும், முதல் முயற்சியாக தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன்” என்று வாக்குறுதி அளித்தார்.
சமீபத்திய செய்தி: “பிறரை குறைசொல்லி வாக்கு சேகரித்தால் வரும் பாதகத்தை உணர்ந்தவன் நான்”- ராஜேந்திர பாலாஜிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM