கோவா, உத்ரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளளது.
கோவாவில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளுக்கும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துச் சென்றனர்.
கோவா மாநிலத்தில் 78 சதவீதமும், உத்தரகாண்டில் 60 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், உத்தர பிரதேத்தில் 2ஆம் கட்டமாக 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.