மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அளவுக்கு நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. புதிது புதிதாக உருவாகிவரும் நோய்களை தீர்க்க மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் கூட கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் பயனாக தற்போது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா போன்ற புதிய தொற்றுகள், நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடிக்கும்போது, அவை விற்பனைக்கு வருவதற்கு முன் முதலில் எலி, முயல், குரங்கு போன்ற விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்படுவது வழக்கம்.
இதுபோன்று, கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் மருத்துவ ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
கோவிட் “அலைகள் ஓய்வதில்லை”.. அடுத்தடுத்து வரும்.. ஒழியாது.. விஞ்ஞானிகள்
இதனையடுத்து, விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுப்பெற்றுள்ளது. இதனை ஆதரிப்பவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் அண்மையில் நடத்தினர்.
இதனை கருத்தில் கொண்டு, சிகரெட் விளம்பரங்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்புடன், விலங்குகள் பரிசோதனையை தடை செய்வது குறித்த வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், மருத்துவ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து விலங்குகளை பயன்படுத்தும் நடைமுறைக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என்பதை
சுவிட்சர்லாந்து
அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!
அப்படி தடை விதிக்கப்பட்டால் உலகிலேயே
மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த தடை
விதித்த முதல் நாடு என்ற பெருமையை சுவிட்ர்சலாந்து பெறும்.
இதனிடையே மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு விலங்குகளை பயன்படுத்த தடைவிதிக்க கோரி பிரச்சாரம் செய்வோருக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன..