உத்தரபிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடாதது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து மம்தா பானர்ஜி கடந்த வாரம் பிரசாரம் மேற்கொண்டார். மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலத் தேர்தல்களில் மம்தாவின் திரிணமூல் சமீபகாலமாக போட்டியிட்டு வருகிறது.
தற்போது கூட, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. இந்நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடாதது குறித்து மம்தாவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டே உத்தரபிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஒரு தொகுதியில் கூட சமாஜ்வாதி கட்சி பலவீனம் ஆகிவிடக் கூடாது என்ற காரணத்தாலேயே இந்த தேர்தலில் இருந்து திரிணமூல் ஒதுங்கியது” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM