நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை விற்க விரும்பினால், அதை விற்று நல்ல சலுகையைப் பெறுவதற்கான தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Flipkart இன் புதிய சேவை உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். Flipkart இன்று (பிப்ரவரி ) முதல் பயனர்களுக்காக ‘Sell Back Program’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Flipkart இல் நல்ல விலையில் விற்கலாம்.
பிளிப்கார்ட்
பழைய போனுக்கு ஈடாக மின்னணு பரிசு கூப்பனை அதிரடி சலுகைகளுடன் உங்களுக்கு வழங்குகிறது. முக்கியமாக, நீங்கள் பிளிப்கார்ட் தளத்தில் இருந்து வாங்காத போன்களைக் கூட செல்பேக் திட்டத்தின் கீழ் அந்த நல்ல விலைக்கு விற்க முடியும்.
Flipkart Sale: வெறும் ரூ.190க்கு OPPO A53s 5G மொபைல் – அதிரடி காட்டும் பிளிப்கார்ட்!
பிளிப்கார்ட் நிறுவனம், நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி போன்ற பல நகரங்களும் அடங்கும். சமீபத்தில் பழைய மின்னணு பொருள்களை வாங்கி விற்கும்
Yaantra
எனும் தளத்தை பிளிப்கார்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
பெண்ணுக்கு காத்திருந்த ஷாக் – iPhone 13 Pro Maxக்கு பதிலாக பார்சலில் வந்த பொருள்!
இந்த திட்டத்தில் நீங்கள் பலன் அடைய சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. பழைய மொபைல்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல விலை கிடைக்கிறது. மேலும், இதில் கிடைக்கும் கேஷ் கூப்பனைக் கொண்டு பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.
முதலில் Flipkart செயலியைத் திறக்கவும் கீழே மையத்தில் உள்ள மெனுவை கிளிக் செய்யவும் அதில் ‘Sell Back’ என்பதை தேர்வு செய்ய வேண்டும் தொடர்ந்து கேட்கப்படும் மூன்று எளிய கேள்விகளுக்குப் பதிலளித்து உங்கள் பழைய மொபைலின் விலையைக் கண்டறியவும்விலை சரியாக இருக்கும்போது அதை உறுதிப்படுத்தவும்உறுதிப்படுத்திய 48 மணி நேரத்திற்குள், Flipkart நிர்வாகி உங்கள் வீடு அல்லது முகவரிக்கு வந்து போனை சேகரித்துக் கொள்வார்பிளிப்கார்ட் கூப்பன் கைபேசி சரிபார்த்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வழங்கப்படும்
வெறும் ரூ.8,999 விலையில் தொடங்கும் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள்!
மின்னணு கழிவுகள் குறைக்க உதவும் திட்டம்
ஐடிசியின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12.5 கோடி பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அவற்றில் 2 கோடி மொபைல்கள் மட்டுமே மறுசுழற்சி சந்தைக்கு திரும்பியுள்ளன. இதனால் நாட்டில் அதிக அளவில் மின்னணுக் கழிவுகள் குவிந்து வருகின்றன. நாட்டில் அதிகரித்து வரும் இந்த மின்னணு கழிவுப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தச் சிக்கலைக் குறைப்பதில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் Sell Back திட்டம் பெரிதும் உதவும். செல் பேக் திட்டம், பயனர்கள் கொடுக்கும் மொபைல்களுக்கு ஈடாக அவர்களுக்கு நல்ல தொகையை வழங்கிறது.
முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!