புதுடெல்லி: ரவிதேஜா நடித்துள்ள கில்லாடி படம் மீது பாலிவுட் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான படம் கில்லாடி. இதே பெயரில் இந்தியில் ஒரு படம் வெளியானது. அதில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். அந்த படத்தை ரதன் ஜெயின் தயாரித்து இருந்தார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரத்தன் ஜெயின் தாக்கல் செய்த மனுவில், ‘கில்லாடி என்ற பட பெயர் இந்தியா முழுமைக்கும் பொதுவானது. அந்த தலைப்பை நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த பெயரில்தான் சில ஆண்டுகளுக்கு முன் படமும் தயாரித்தேன். இப்போது என்னிடம் அனுமதி பெறாமல், தெலுங்கு படத்துக்கு கில்லாடி என தலைப்பை வைத்து ரிலீசும் செய்திருக்கிறார்கள். அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.