அதிவேக நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் வாகன இறக்குமதிக்கான தடையை மீறி இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டடை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி காட்சிக்கு பதிலளிக்கும் வகையில் சுங்க பிரதிப் பணிப்பாளரும் (சட்ட) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா இதனைத் தெரிவித்தார்.
கடுவெல முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் பின்னர் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலையில் கொண்டு செல்லட்ட அதி சொகுசு வாகனங்களை பின்தொடர்ந்து வந்த மற்றொரு வாகனத்தில் இருந்து நபர் ஒருவர் இரண்டு வாகனங்களையும் படம்பிடித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த வாகனங்கள் எவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது எனவும் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த நபர் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wonder who gets down these expensive vehicles when there is an import restrictions in #SriLanka #vehicles #cars #import pic.twitter.com/wUcejIw591
— Sulochana Ramiah M (@sulorammohan) February 14, 2022