நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யின் பொது பங்கு வெளியீடு (IPO) விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைக்கு வரும் முன்பே பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ள எல்ஐசி பங்கு வெளியீட்டில் பல்வேறு விதமான கணிப்புகள் நிலவி வருகின்றன.
எல்ஐசி பங்கு வெளியீடானது மார்ச் இறுதிக்குள் இருக்கலாம் என்று பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. இதற்கிடையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு செபிக்கு (SEBI) அரசு ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வந்தாச்சு எல்ஐசி ஐபிஓ.. டிசிஎஸ், ரிலையன்ஸ்-க்கு புதிய பிரச்சனை..!
எதிர்பார்ப்பு
இதன் மூலம் அரசுக்கு சொந்தமான 5% பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செபிக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி( DRHP), எல்ஐசியின் 31,62,49,885 பங்குகளை, 10 ரூபாய் முகமதிப்புடன் அரசாங்கம் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பங்கு வெளியீட்டில் அரசிடம் உள்ள பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் பங்கு வெளியீட்டில் விலையானது ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் புதிய வெளியீடு என்பது இல்லை.
ஐபிஓ மதிப்பு
செபியிடம் வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் பங்கு வெளியீடு குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்ஐசியின் 5% பங்கினை விற்பனை செய்வதன் மூலம் 53,500 – 93,625 கோடி ரூபாய் நிதியினை திரட்டலாம் என கூறப்படுகின்றது.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு
இதில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10% பாலிசிதாரர்களுக்கும், இது 5% தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளதாகவும் யூகங்கள் இருந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 30, 2021ல் எல்ஐசி-யில் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு 5.39 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பினை விட பல மடங்கு அதிகமாகும்.
எதற்காக இந்த நிதி
அரசு நிதிப் பற்றாக்குறையில் இருந்து வரும் நிலையில்,எல்ஐசி பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது அதற்கு பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான மூலதனமாகவும் பயன்படுத்தப்படலாம். மொத்தத்தில் எல்ஐசி பங்கு வெளியீட்டின் மூலம் மிகப்பெரிய தொகை திரட்டப்படலாம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
Be ready! LIC IPO could be priced in the range of Rs.1700 – 3500
Be ready! LIC IPO could be priced in the range of Rs.1700 – 3500/எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..!