பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, பிறகு முதலீடு செய்வது நல்லது. அதிலும் பென்னி பங்குகளில் முதலீடு செய்யும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து, ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
ஏனெனில் எல்லா பென்னி பங்குகளும் லாபகரமான மல்டிபேக்கர் பங்குகளாக ஏற்றம் காண்பதில்லை.
அந்த வகையில் நாம் இன்று அலசி ஆராயவிருப்பது ஒரு பென்னி பங்கினை பற்றி தான். அது என்ன பங்கு? எந்தளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. அதன் தற்போதைய நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..!
ஓராண்டு நிலவரம்
நாம் இன்று பார்க்கவிருப்பது பிரைட்காம் குழுமத்தின் பங்கினை தான். இந்த பங்கின் விலையானது கடந்த ஓராண்டில் 2320% ஏற்றத்தினை கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது பிப்ரவரி 12, 2021 அன்று 6.17 ரூபாயாக இருந்தது. இதே இன்று 150 ரூபாயாக உள்ளது.
இன்றைய உச்ச விலை
இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 24 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 10.36% அதிகரித்துள்ளது. இந்த மிட்கேப் பங்கின் இன்றைய உச்ச விலை 150.10 ரூபாயாகவும் உச்சம் தொட்டுள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
பிரைட்காம் குழுமத்தின் பங்கு விலையானது இன்று 5% சரிந்து, 150.10 ரூபாயாக என்.எஸ்.இ-யில் முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 150.10 ரூபாயாகவும், இன்றைய குறைந்தப்ட்ச விலை 150.10 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 204.80 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 5.68 ரூபாயாகவும் உள்ளது.
இதே பிஎஸ்இ-யில் 4.98% குறைந்து 149.85 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 157.70 ரூபாயாகவும் முடிவடைந்திருந்தது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
டெக்னிக்கலாக பார்க்கும்போது இந்த பங்கின் விலையானது 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக இருந்து வருகின்றது. எனினும் 5 நாள், 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் கீழாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் 3.27 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மதிப்பு 4.90 கோடி ரூபாய் ஆகும்.
நடப்பு ஆண்டில் இருந்து வீழ்ச்சி
இதற்கிடையில் இதன் சந்தை மூலதனம் 15,608 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த பங்கின் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 16.31% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
இதன் 52 வார உச்சமான 204.80 ரூபாயினை கடந்த டிசம்பர் 24,2021 அன்று தொட்டது. இதே 52 வார குறைந்தபட்ச விலையானது மே 5, 2021 அன்று தொட்டது.
பங்கு விகிதம்
இதில் 15 புரோமோட்டர்காள் 19.74% பங்கினை வைத்துள்ளனர். இதே பங்குதாரர்கள் ஜனவரி 25, 2022 நிலவரப்படி, 80.26% பங்கினை வைத்துள்ளனர். 2,11,987 பொது பங்குதாரர்கள் 94.83 லட்சம் மதிப்பிலான பங்குகளையும் வைத்துள்ளனர்.
நிகரலாபம்
இந்த நிறுவனத்தின் நிகரலாபம் டிசம்பர் காலாண்டில் 168% அதிகரித்து, 371.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 138.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. விற்பனையானது 130% அதிகரித்து, 2021 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 878.55 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் செயல்பாட்டு லாபம் 127.31% அதிகரித்து, 568.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 250.27 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Rs.6 to Rs.150: Brightcom group stock turned into a multibagger in 1 year
Rs.6 to Rs.150: Brightcom group stock turned into a multibagger in 1 year/ரூ.6 டூ ரூ.150: பல மடங்கு லாபம் கொடுத்த பென்னி பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?