சென்னை:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இப்போது நடந்து வருகிறது.
திருவண்ணாமலையில் 14-ம் தேதி நடக்கவிருந்த 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வும், பிளஸ்2-க்கு கணிதத் தேர்வும் வினாத்தாள்கள் வெளியானதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
வினாத்தாள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்திலும் இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விசாரணை நடந்து வரும் நிலையில், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறும் ஆங்கிலப் பாட வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியானது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி தேர்வாக இன்று நடைபெறக்கூடிய சமூக அறிவியல் கேள்வித்தாள் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்…10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை