உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் வாக்குகள் பாஜகவுக்குப் போகக்கூடாது என்று பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரத்தடை விதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்று போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
உத்தரப்பிரதே தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் பற்றி பாகிஸ்தான் வெளியிட்ட கருத்துக்கு ஹைதராபாத் எம்பி ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று தெரிவித்த அவர் பாகிஸ்தானியர்கள் நரகத்திற்கு போகட்டும் அவர்களுடன் நமக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கூறினார்