மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு



மருத்துவ பணிப்பாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்பதாவது நாளாகவும் மருத்துவ பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது ஏழு கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சாதகமான பதிலை அளித்த போதிலும் உறுதி மொழி எதனையும் வழங்கவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறெனினும், இன்றைய தினம் காலை 9 மணிக்கு மீண்டும் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.