தங்கத்தின் விலையானது கமாடிட்டி சந்தையில் மூன்று மாத உச்சத்தில் காணப்படுகின்றது. இது கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்னும் விதமாகவே காணப்படுகின்றது.
அதேசமயம் ஆபரணத் தங்கத்தின் விலையானது இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்களுக்கும், தங்க முதலீட்டாளர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. ஆக ஆபரணத் தங்கத்தின் விலையானது தற்போது குறைந்திருந்தாலும், நிச்சயம் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூம் காலில் 900 ஊழியர்களை துரத்திய Better.com இந்தியாவில் 1000 பேருக்கு வேலை..விஷால் கர்க் முடிவு..!
ரஷ்யா – உக்ரைன் பதற்றம்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. இது எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. உக்ரைன் எல்லையில் ஆயுதங்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது தொடர்ந்து சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றது.
உச்சத்தில் கச்சா எண்ணெய்
ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் 7 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 96 டாலர்களை கடந்துள்ளது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தினறி வரும் நாடுகள், மேற்கொண்டு இதனால் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இதன் காரணமாக சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் Vs தங்கம்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம், தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது மேற்கொண்டு, பணவீக்கத்தில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்கு சந்தைகள் என பலவும் இன்றும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. இதன் காரணமாக பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அதோடு தொடர்ந்து இந்த பதற்றமான நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? என்றும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தேவை அதிகரிப்பு
தங்கத்திற்கான தேவையானது பிசிகல் தங்கமாகவும், முதலீட்டு ரீதியாகவும் அதிகரித்துள்ளது. இது இன்னும் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் நம்புகின்றனர். ஆக இதுவும் தங்கம் விலைக்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம்.இதற்கிடையில் தான் தங்கம் விலையானது கடந்த அமர்வில் 50,000 ரூபாயினை தாண்டியது. இதே வெள்ளி விலையும் உச்சம் தொட்டது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 11 டாலர்கள் அதிகரித்து,1880.40.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் பலத்த ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.915 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும், இன்றைய உச்ச விலையும் இதுவரையில் ஒன்றாக உள்ளது. ஆக அதனை உடைத்தால் வெள்ளி விலையானது இன்னும் நன்றாக அதிகரிக்கலாம்.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 395 ரூபாய் அதிகரித்து, 50,311 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 319 ரூபாய் அதிகரித்து, 64,552 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று இரண்டாவது நாளாக சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4,695 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 37,560 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 5,122 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 40,976 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை குறைந்திருந்தாலும் ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 69.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 692 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 69,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் இன்று ம் பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. இதே ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் இன்றும் 2வது நாளாக சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம். இதே முதலீட்டு ரீதியாக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.
gold price on 15th February 2022: gold jewellery prices fall down in 2nd day
gold price on 14th February 2022: gold prices nearly in 3 month high amid Ukraine tensions/3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..!