ஆஸ்லோ: கடந்த 2021 ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தேர்வுக் குழு ஈடுபட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டனைச் சேர்ந்த இயற்கை வரலாற்றாளர் டேவிட் அட்டன்பரோ, உலக சுகாதார அமைப்பு,பெலாரஸின் மனித உரிமை ஆர்வலரும் 2020-ல் பெலாரஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஸ்வியட்லானா சிகானூஸ்கயா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கத்தோலிக்க தேவாலயங்களின் தந்தை போப் பிரான்சிஸ், மியான்மர் தேசிய ஒற்றுமை அரசு உள்ளிட்ட பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.