டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு வழக்கை ஏன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் சாசன பிரச்சனைகள் குறித்து அரசியல் சாசன அமர்வு தான் முடிவு செய்ய முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் தான் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தரப்படுகிறது என தெரிவித்தது.