ரஷ்யா Vs உக்ரைன்: என்னப்பா அங்க சத்தம்.. "சும்மா" சண்டை போட்டுக்கிட்டிருக்கோம் பாஸ்!

“அச்சச்சோ விலாடிமிர் புடினுக்கு கோபம் வந்துருச்சே.. உக்ரைன் என்னாகப் போகுதோ.. அணுகுண்டு வீசி அழிச்சுருவாங்களோ”.. என்றெல்லாம் நிறையப் பேர் கவலைப்பட்டிட்டிருக்காங்க.. ஆனால் கடந்த காலங்களை ரீவைன்ட் செய்து பார்த்தால்.. சும்மா பூச்சாண்டி காட்டத்தான் ஆளாளுக்கு கையில் அணுகுண்டுகளை தயாரித்து உருட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஒருவருக்கும் அதை பயன்படுத்தும் திட்டமும் இல்லை, தைரியமும் இல்லை என்பதே நிதர்சனம்.

கிரீமியா.. கிழக்கு ஐரோப்பாவில் 3 பக்கமும் கருங்கடல் சூழ்ந்த தீபகற்பப் பகுதி. சுமாராக 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உக்ரைனுக்குச் சொந்தமானது.. ஆனால் தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் தீவிரமாக உள்ளது. உக்ரைனுக்குப் பின்னால்
நேட்டோ
அமைப்பு உள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைனும் தற்போது ஒரு உறுப்பினர் என்பதால் அமெரிக்காவின் முழு ஆதரவும் உக்ரைனுக்கு உள்ளது.

இது போதாதா.. சும்மாவே உக்ரைன் என்று பேப்பரில் எழுதிக் கொடுத்தாலே.. அந்த பேப்பரை
ரஷ்யா
எரித்து தூள் தூளாக்கி விடும். இந்த நிலையில் அமெரிக்க ஆதரவுடன் உக்ரைன் என்று வந்தால் சும்மா இருக்குமா.. கொதித்துக் கொந்தளித்துப் போய் நிற்கிறது ரஷ்யா.. உக்ரைனுக்குள் தனது படையை அனுப்பி அதை துவம்சம் செய்ய நாள் குறித்துக் காத்திருக்கிறது. கிரிமீயாவுக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தால் உக்ரைனை தொலைத்து எடுத்து விடுவோம், அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று ரஷ்யா மிரட்டியுள்ளது.

ஆனால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது அத்தனை சுலபமா.. ஈஸியாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி விட முடியுமா என்று கேட்டால்.. நிச்சயம் இல்லை என்ற பதில்தான் வரும். அமெரிக்காவும் சரி, ரஷ்யாவும் சரி குவியல் குவியலாக அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள கொழுப்புப் பிடித்த நாடுகள். இவர்களின் வியாபாரத்திற்குத்தான் பல்வேறு உலக நாடுகளும் அடிமையாகிக் கிடக்கின்றன. இவர்களின் போர் வெறியால்தான் இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் இவர்களே அணுகுண்டு போடுவார்களா என்று கேட்டால் சாத்தியம் மிக மிக குறைவுதான்.

நேட்டோவும் சரி, ரஷ்யாவும் சரி அணு ஆயுதங்களை வைத்திருப்பதில் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது. இந்த நாடுகள் முழுமையாக அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், உலகமே அழிந்து புல் பூண்டு கூட இல்லாமல் போய விடும். ஆனால் இவர்களால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது. தங்களது பலத்தைக் காட்டவும், யார் பெரிய ஆள் என்ற சண்டையில் தங்களது கை ஓங்கியிருக்கவும் மட்டுமே இவர்கள் அணு ஆயுதங்களைக் கையில் வைத்துள்ளனர் என்பதே நிதர்சனமாகும்.

ரஷ்யாவிடம் 4497 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் 1700 அணு ஆயுதங்களை அது தயார் நிலையில் உள்ளது. 2897 ஆயுதங்களை ரிசர்வில் வைத்துள்ளது. நேட்டோவிடம் உள்ள அணு ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுடைய அணு ஆயுதங்கள்தான். அவர்களிடம் 3800 அணு ஆயுதங்கள் உள்ளன. அதில் 1800 ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளன. இது ரஷ்யாவை விட 100 ஆயுதங்கள் கூடுதலாகும் என்பது முக்கியமானது.

கே.சி.ஆரின் எழுச்சி… ஆஹா.. இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லையே.. மோடி குஷிதான்!

ஆனால் இந்த நாடுகளுக்கு மத்தியில் போர் வெடித்தால், மிகப் பெரிய உக்கிரமான போராக அது இருந்தாலும் கூட அணு ஆயுதங்களை ஒருவரும் கையில் எடுக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். உலகம் முதலும் கடைசியுமாக அணு ஆயுதப் போரைப் பார்த்தது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான். 2வது உலகப் போரின்போது ஜப்பான் மீது
அமெரிக்கா
அணுகுண்டுகளை வீசியது. இதில் ஹீரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களும் நிர்மூலமாகின. அவற்றில் ஏற்பட்ட தாக்கம் இன்று வரை உலக நாடுகளால் வேதனையுடன் அனுபவிக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய பேரழிவை ஜப்பான் சந்தித்தது.

இந்த அணு ஆயுதத் தாக்குதலில் ஹீரோஷிமா நகரின் பாதி மக்கள் தொகை அழிந்து போனது. நாகசாகியில் 65,000 பேர் உயிரிழந்தனர். இரு நகரங்களிலும் இருந்த முக்கால்வாசிக் கட்டடங்கள் நொறுங்கிப் போய் விட்டன. இரு நகரங்களிலும் சேர்த்து மொத்தமாக 2.5 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று பின்னர் கூறப்பட்டது. உலகின் மிகப் பெரிய போர் உயிர்ச் சேதமாக அது மாறியது. உலகமே அதிர்ந்து போனது. மனிதகுலத்தின் மீது அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய தாக்குதல் அது. உலக நாடுகளின் கண்களில் கொடூரனாக மாறி நின்றது அமெரிக்கா.

இந்தப் போருக்குப் பின்னர்தான் அணு ஆயுதங்களின் பேரழிவையும், அபாயத்தையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உணரத் தொடங்கின. அதன் பின்னர் அணு ஆயுத ஒழிப்புக்காக உலக நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கின. தொடர் குரல்கள் காரணமாக அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை அழிக்க முடிவு செய்து படிப்படியாக அதைச் செய்தும் வந்தன. ஆனால் திருட்டுத்தனமாக தயாரித்துக் குவிக்கவும் செய்தன.

சகாயமேரிக்கு சால்வை போர்த்திய திமுக எம்எல்ஏ.. பிரச்சினையாக்கும் பாஜக!

1945ம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவிடம் மட்டும்தான் அணு ஆயுதம் இருந்தது. ஆனால் இன்று ஏராளமான நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே அணு ஆயுதப் போர் என்று வந்தால் அது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல.. அமெரிக்காவுமே கூட ஆபத்துதான். எனவே யாரும் அணு ஆயுதப் போரில் குதிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதே பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது.

என்னதான் அமெரிக்கா துணைக்கு வந்தாலும், நேட்டோ உடன் இருந்தாலும், உக்ரைனால், ரஷ்யாவை பெரிய அளவில் பாதிப்பைக் கொடுக்க முடியாது. அதேபோல ரஷ்யாவும் ஓரளவுக்கு மேல் உக்ரைனைத் தாக்க முன்வராது.. எச்சரிக்கை செய்யும் வகையிலான தாக்குதலிலேயே ரஷ்யா ஈடுபடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.