ராம்நகர்-”சட்டசபை கூட்டத்தில், மாநிலத்தின் சட்டம் — ஒழுங்கு, ஊழல், 40 சதவீதம் கமிஷன், அரசின் தோல்வி குறித்து பேசுவோம்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.ராம்நகர் சென்னப்பட்டணாவில் அவர் நேற்று கூறியதாவது:ராம்நகருக்கு புதிதாக வந்துள்ள எஸ்.பி., யார் என்பதே எனக்கு தெரியவில்லை. அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பணியாற்ற வேண்டாம். சட்டப்படி பணியாற்றினால் போதும்.கர்நாடகாவில் கூட்டணி அரசு வருமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.,வுக்கு 150 தொகுதிகள் கிடைக்கும் என்கின்றனர். குமாரசாமி தங்களுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்கிறார். ஆனால் காலமே பதிலளிக்கும்.நான் ராம்நகரிலிருந்து போட்டியிடுவேன் என்பது பொய். தற்போதைக்கு கனகபுரா மக்கள் என்னை தேர்ந்தெடுத்து, அன்பு காண்பித்துள்ளனர். அடுத்த முறை நான், எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்யும்.சட்டசபை கூட்டத்தில், மாநிலத்தின் சட்டம் — ஒழுங்கு, ஊழல், 40 சதவீதம் கமிஷன், அரசின் தோல்வி குறித்து பேசுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement