சென்னை: காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரப்புரையில் பேசிய அவர், கலைஞர் போராடி போராடி வளர்த்த மாவட்டம் தஞ்சை மாவட்டம். கலைஞரின் போராட்ட தழும்பு ஏறிய ஊர்தான் தஞ்சாவூர். தஞ்சை பெரிய கோவிலின் 1000வது சதய விழா நடத்தியது கலைஞர்தான் என்று கூறினார். தஞ்சை மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களே வியக்கும் வகையில் மகாமக விழாவை சிறப்பாக நடத்தியது திமுக ஆட்சி என்றும் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.