மெட்டா நிறுவனத்தின் பிரபல புகைப்படம் பகிரும் தளமான
இன்ஸ்டாகிராம்
தொடர்ந்து பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்டுகள் இருந்து வருகின்றன. இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அம்சம் ‘
Private Story Likes
’ என அழைக்கப்படுகிறது.
பல கோடி பயனர்கள் உலாவும் தளமான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மெட்டா வழங்கியுள்ளது. இச்சூழலில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை லைக் செய்யும்போது, அது ஸ்டோரி பதிவிட்ட பயனர்களுக்கு Direct Message ஆக செல்லும். இந்த முறையை மாற்ற இன்ஸ்டாகிராம் பல கட்ட ஆய்வுகளை நடத்தி வந்தது. அதன் விளைவாக தற்போது புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!
பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ் அப்டேட்
அதன்படி, இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் உங்களுக்குப் பிடித்திருந்தால் நேரடியாக லைக்ஸுகளை பறக்கவிடலாம். அது ஸ்டோரி பதிவிட்டவருக்கு மெசேஜாக செல்லாது. உங்கள் வெளிப்பாடு அந்த ஸ்டோரியிலே நின்று விடும். அவரை பின் தொடருபவர்களும் நீங்கள் லைக் செய்ததை பார்க்க முடியாது.
பேஸ்புக் பதிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கிறது. பதிவிட்டவர் மட்டும் தங்கள் ஸ்டோரிஸ்களுக்கு யார் லைக்ஸ் கொடுத்தது என்பதை காண முடியும். அதுவும் பொதுவாக காட்சிப்படுத்தப்படும் Feed இல் பார்க்க முடியாது. உங்கள் ஸ்டோரி பகுதிக்குச் சென்றால், நீங்கள் பதிவிட்டிருக்கும் ஸ்டோரிக்களை யார் லைக் செய்தார்கள் என்பதை பார்க்க முடியும்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை
தங்கள் தளத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதில் இன்ஸ்டாகிராம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. முன்னதாக போஸ்ட், கமெண்ட் மற்றும் இதர செயல்பாடுகளை நீக்குவதற்கான எளிமையான வழிமுறைகளை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!
இந்த புதிய ‘பிரைவேட் ஸ்டோரி லைக்ஸ்’ அப்டேட் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசேரி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், புதிய அம்சம் குறித்த விளக்க வீடியோவையும் அதில் இணைத்து வெளியிட்டுள்ளார்.
கூடுதல் தகவலாக தற்போது நீங்கள் இன்ஸ்டாகிராமில் செலவிட்ட நேரத்தை கண்டறிவது மிகவும் எளிது. கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் செலவிட்ட நேரத்தைத் அறிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் போனில் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறக்கவும்Profile என்பதை கிளிக் செய்யவும் அல்லது உங்கள் முகப்புப் பக்கத்தின் வலது ஓரத்தில் உள்ள உங்கள் படத்தை கிளிக் செய்யவும்.பின்னர் மெனு என்பதை கிளிக் செய்யவும்.Your Activity என்பதை கிளிக் செய்து, அதில் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்இதில், கடந்த வாரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் செலவிட்ட சராசரி நேரம் தெளிவாகக் காட்டப்படும்
கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… ஆபத்து இருப்பதாக அரசு தகவல்!