பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவிக்கும் கோவிட்| Dinamalar

லண்டன் : பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவி கமீலாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு, 73, கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. அரண்மனையிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், சார்லஸ் மனைவி கமீலாவுக்கும்,74, தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கமீலாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம், விண்ட்சர் மாளிகையில் ராணி எலிசபெத்தை சார்லஸ் சந்தித்துள்ளார். இதையடுத்து, எலிசபெத்துக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதா என்ற விபரத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.