இந்திய ஐடி சேவை துறை முதல் முறையாக 200 பில்லியன் டாலர் அளவிலான வருமான அளவீட்டைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது. குறிப்பாக மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான சேவையின் காரணமாக வருமானம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!
இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறை 2011ஆம் ஆண்டுக்குப் பின்பு சிறப்பான வளர்ச்சியை 2022ஆம் நிதியாண்டில் பதிவு செய்ய உள்ளதாக ஐடி துறை நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்திய டெக்னாலஜி துறை
2022ஆம் நிதியாண்டில் இந்திய டெக்னாலஜி துறையின் மொத்த வருவாய் அளவு முதல் முறையாக 200 பில்லியன் டாலரை தற்போது தாண்டியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் அதன் அளவு 227 பில்லியன் டாலர் அளவீட்டை தொடும் எனக் கணித்துள்ளது நாஸ்காம்.
15.5 சதவீத வளர்ச்சி
இதோடு 2011ஆம் ஆண்டுக்கு பின்பு 2022ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி துறை சுமார் 15.5 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் மிக முக்கியமான வளர்ச்சி சாதனையாக நாஸ்காம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
4,50,000 வேலைவாய்ப்பு
2022ஆம் நிதியாண்டில் இந்திய டெக் துறை கூடுதலாக 30 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இதேபோல் 4,50,000 பேர் புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு இந்திய ஐடி துறைக்குப் பிரேக்த்துரு ஆண்டாக அமைந்துள்ளது என நாஸ்காம் தலைவர் ரேகா எம்.மேனன் தெரிவித்துள்ளார்.
துறை வாரியான வருமானம்
இந்த ஆண்டு ஐடி சேவை துறை 116 பில்லியன் டாலரும், BPM துறை 44 பில்லியன் டாலரும், ER&D துறை 36 பில்லியன் டாலரும், வன்பொருள் துறை 17 பில்லியன் டாலரும், சாப்ட்வேர் ப்ராடெக்ட் பிரிவு 13 பில்லியன் டாலரும் வருமானமாகப் பெறும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம்
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்திய ஐடி துறையின் மொத்த ஏற்றுமதி அளவு 17.2 சதவீதம் வரையில் அதிகரித்து 178 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஏற்றுமதி வர்த்தகம் வாயிலாக மட்டுமே பெற்புள்ளது குறிப்பிடத்தக்கது. ஈகாமர்ஸ் துறை 39 சதவீத உயர்வில் 79 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
Indian tech industry to reach $227 billion in revenue for first time – nasscom
Indian tech industry to reach $227 billion in revenue for first time – nasscom அசத்தும் ஐடி துறை.. 2011க்குப் பின் தரமான வளர்ச்சி – நாஸ்காம் அறிவிப்பு..!!