பாண்டுங்:இந்தோனேஷியாவில், 11 முதல், 14 வயதிற்கு உட்பட்ட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணம் பாண்டுங் நகரில் முஸ்லிம் மாணவியருக்கான உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.இதன் முதல்வராக இருந்தவர் ஹெர்ரி விராவன். இவர், 2016 முதல் 2021 வரை, 11 முதல், 14 வயதிற்கு உட்பட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற ஒன்பது மாணவியர் குழந்தை பெற்றுள்ளனர்.
இந்தப் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஹெர்ரியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியரின் உளவியல் ரீதியான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, வழக்கு குறித்த விபரங்களை போலீசார் மறைத்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஹெர்ரி, பாதிக்கப்பட்ட சிறுமியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.
முடிவில், ஹெர்ரிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவியருக்கு 17.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement