ட்விட்டரில் எப்போதும் பிசியாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, புது புது கண்டுபிடிப்புகள், ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகள் என பல சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்து வருபவர்.
அதுமட்டும் திறமைகளை ஊக்குவிப்பதோடு, பாராட்டவும் செய்வார். ஏன் புதிய கண்டிபிடிப்பாளர்களை பாராட்டுவதோடு மட்டும் அல்ல, தேவையான உதவிகளையும் செய்வார்.
3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!
அப்படிப்பட்டவர் தற்போது தனது சாதாரண சைக்கிளை மின்சார சைக்கிளாக சில நிமிடங்களிலேயே மாற்றியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். அது என்ன வீடியோ? அப்படி என்ன தான் வீடியோவினை பகிர்ந்துள்ளார்.
சாதாரண சைக்கிள் டூ எலக்ட்ரிக் சைக்கிள்
துருவ் வித்யூத் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் குர்சவுரப் சிங் உருவாக்கிய அற்புதமான சைக்கிள் பற்றிய வீடியோ தான் அது. துருவ் வித்யூத் எலக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் (DVECK) என்ற கருவியை வைத்து, சாதாரணமான சைக்கிளாக இருக்கும் ஒரு சைக்கிளை, சில நிமிடங்களிலேயே மின்சார சைக்கிளாக மாற்றியுள்ளார்.
ட்விட்டரில் பகிர்வு
இந்த வீடியோவினைத் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். பகிர்ந்ததோடு மட்டும் அல்லாமல், பாராட்டியும் உள்ளார்.
25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த சைக்கிள், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 40 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இந்த சைக்கிள் 170 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது.
தண்ணீரால் எந்த பிரச்சனையும் இல்லை
இந்த சைக்கிள் தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்தளவுக்கு தொழில் நுட்பத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இது மோட்டார் மூலம் இயங்கும் முதல் கருவி அல்ல. எனினும் இது ஒரு திறமையான கண்டுபிடிப்பு. சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடுகின்றது. இது மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றுவ்து போல ஏற்றினாலே, விரைவில் போதிய அளவுக்கு சார்ஜ் ஏற்றுகிறது.
தொடர்பு கொள்ள முடியுமா?
இது வணிக ரீதியாக வெற்றி பெறுவது அல்லது கணிசமாக லாபம் ஈட்டுவது தவிர்க்க முடியாதது. நான் இன்னும் ஒரு முதலீட்டாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். குர்சவுரப்- பினை தொடர்பு கொள்ள உதவினால் நன்றி என பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்றது.
ஆவலுடன் காத்திருக்கிறேன்
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள 8 கோடி மக்களுக்கு இந்த கண்டுபிடிப்பை பெற வேண்டும் என்பது எனது கனவு. உங்களுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் சார். இது எனக்கு மகிழ்ச்சியான நாள் என ஆர்வமுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குர்சவுரப் சிங் (துருவ்வித்யூத்) என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Who is this Gursavurabh Singh? who amazed Anand Mahindra?
Who is this Gursavurabh Singh? who amazed Anand Mahindra?/யார் இந்த குர்சவுரப் சிங்.. ஆனந்த் மஹிந்திராவை பிரமிக்க வைத்த நபர்.. உங்களுக்கு தெரியுமா?