துபாய்: பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 9.94 கோடி பரிசுத் தொகை தரப்பட உள்ளது.
நியூசிலாந்தில் மார்ச் 4 – ஏப். 3ல் பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதற்கான மொத்த பரிசு தொகை ரூ. 26.36 கோடி. கடந்த 2017 தொடரை (ரூ. 11.30 கோடி) விட 75 சதவீதம் அதிகம்.
பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 9.94 கோடி தரப்பட உள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 4.52 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோற்கும் இரு அணிகள் தலா ரூ. 2.26 கோடி பெறும். லீக் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ. 52.73 லட்சம் வழங்கப்படும். மொத்தம் நடக்கும் 28 லீக் போட்டிகளில், ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 18.83 லட்சம் கிடைக்கும்.
துபாய்: பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 9.94 கோடி பரிசுத் தொகை தரப்பட உள்ளது.நியூசிலாந்தில் மார்ச் 4 – ஏப். 3ல் பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 8
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.