ராகுல் காந்தி
போட்ட ஒன்றிய அரசு என்ற ட்வீட்டைத் தொடர்ந்து அவர் மீது அஸ்ஸாம்
பாஜக
மற்றும் அதன் துணை அமைப்புகள் சரமாரியாக போலீஸில் புகார் கொடுத்து வருகின்றன. ராகுல் மீது 1000க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக
அஸ்ஸாம்
பாஜக கூறியுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது வீடியோ உரையின்போது உ.பி. மக்கள் வாக்களிக்கும்போது தவறு செய்து விட்டால், உ.பி. ஒரு கேரளாவாகவோ அல்லது காஷ்மீராகவோ அல்லது மேற்கு வங்காளமாகவோ மாறி விடும் என்று எச்சரித்திருந்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக ராகுல் காந்தி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், நமது ஒன்றியம் மிகவும் பலம் வாய்ந்தது. நமது கலாச்சாரங்களின் ஒன்றியம், நமது வேறுபாட்டின் ஒன்றியம், நமது மொழிகளின் ஒன்றியம், நமது மக்களின் ஒன்றியம், நமது மாநிலங்களின் ஒன்றியம். காஷ்மீர் முதல் கேரளா வரை, குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை.. இந்தியா பல வண்ணங்களில் மிளிரும் அழகிய நாடு. இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள் என்று கூறியிருந்தார் ராகுல் காந்தி.
இதை எதிர்த்துத்தான் தற்போது அஸ்ஸாம் பாஜகவினர் ராகுல் காந்தி மீது போலீஸ் நிலையங்களில் இன்று புகார் கொடுக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தனது டிவீட்டில் வட கிழக்கு மாநிலங்களை ராகுல் காந்தி அவமதித்து விட்டார். நாட்டு மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவர் நடந்து கொள்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மறுபக்கம், காங்கிரஸாரும் அஸ்ஸாம் முதல்வர்
ஹிமந்த பிஸ்வா சர்மா
மீது போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். சர்மா தெரிவித்திருந்த சர்ச்சைக்கிடமான கருத்து தொடர்பாக அவர்கள் இந்தப் புகாரை அளித்து வருகின்றனர்.
இப்படி பாஜகவும், காங்கிரஸும் சரமாரியாக காவல் நிலையங்களை முற்றுகையிட்டு ராகுல் காந்தி மீதும், சர்மா மீதும் புகார்களைப் பதிவு செய்து வருவதால் அஸ்ஸாம் காவல் நிலையங்களில் பரபரப்பு நிலவுகிறது.