பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுத்திருந்த வர்ஜீனியா கியூஃப்ரே சமரசம் செய்து கொண்டார்.
இதுதொடரபாக கியூஃப்ரேவின் வழக்கறிஞர் டேவிட் பாய்ஸ், மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இரு தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள், கொள்கையளவில் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சட்ட நடைமுறைகளை முறைப்படி மேற்கொண்டு, இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக டேவிட் பாய்ஸ் (Attorney David Boies) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சமரச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பாலியல் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் கியுஃப்ரே நிறுவிய தொண்டு நிறுவனத்திற்கு பிரிட்டிஷ் அரச குடும்பம் கணிசமான நன்கொடை அளிக்கும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இனி ‘துருக்கி’ அல்ல ‘துருக்கியே’ : துருக்கி அதிபர் எர்டோகன்
சிறுமிகளையும் இளம்பெண்களையும் பல செல்வந்தர்களுக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்ததாக வர்ஜீனியா கியூஃப்ரே குற்றம் சாட்டியிருந்தார்.
17 வயதாக இருந்தபோது, லண்டனில் கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்பவரின் வீட்டில்,, இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் துஷ்பிரயோகம் (Sexual Abuse) செய்ததாக கியூஃப்ரே குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளியாகிய கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்ற பெண்ணின் லண்டன் வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்த கியூஃ[ரே, அதற்கு ஆதாரமாக தனது இடுப்பில் இளவரசர் ஆண்ட்ரூ கைபோட்டவண்ணம் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் கொடுத்திருந்தார்.
இந்த பாலியல் வன்கொடுமை புகாரை இளவரசர் ஆண்ட்ரூ மறுத்துள்ளார். தற்போது இளவரசருக்கு வயது 61 என்பதும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாக புகாரளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ; போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அதிகாரம் அமல்
தற்போது சமரசம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு இளவரசர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “திருமதி கியுஃப்ரேயின் மாண்பை ஒருபோதும் இழிவுபடுத்த விரும்பியதில்லை, மேலும் அவர் இந்த பாலியல் துஷ்பிரயோக புகார் தொடர்பாகவும், நியாயமற்ற பொது தாக்குதல்களின் விளைவாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை இளவரசர் ஆண்ட்ரூ ஏற்றுக்கொள்கிறார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் தொடர்பு வைத்துக் கொண்டதற்காக வருந்துவதாகவும் அந்த ஆவணங்களில் இளவரசர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிரான பாலியல் புகாரால், ஆண்ட்ரூவின் கெளரவ இராணுவப் பட்டங்கள் மற்றும் தொண்டுப் பாத்திரங்கள் பறிக்கப்படக்கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | கனடா போராட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை; பலரை கைது செய்ய உத்தரவு
ஆனால், அந்த வழக்கில், நியூ யார்க் நீதிபதி லூயிஸ் கப்லான் கியுஃப்ரேவின் வழக்கை நிராகரிப்பதற்கான இளவரசரின் வேண்டுகோளை மறுத்ததை அடுத்து, கடந்த மாதம் இளவரசர் ஆண்ட்ரூவின் கெளரவ ராணுவப் பட்டங்கள் பறிக்கப்பட்டன.
அத்துடன், அரசக் குடும்பத்தின் சார்பில் இளவரசர் ஆண்ட்ரூ அங்கம் வகித்த அறக்கட்டளைகளின் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலக்கி வைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) என்பவர் இளம் பெண்களை செல்வந்தர்களுக்கு பாலியல் விருந்தளித்ததான குற்றச்சாட்டில் துஷ்பிரயோகத்தில் மேக்ஸ்வெல் தண்டிக்கப்பட்டார்.
பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு விசாரணை நடந்துக் கொண்டிருக்கும்போது மன்ஹாட்டன் சிறைச்சாலையில் இருந்த எப்ஸ்டீன் தனது 66வது வயதில் 2019 ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் படிக்க | தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ; போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அதிகாரம் அமல்