சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! – 106 வயதில் மரணம்!

கோவை கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 106 வயதான, அவர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். விவசாயியான மாரப்பனுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் 4 பேரன்கள், 4 பேத்திகள் உள்ளனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்பே பிறந்ததால் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பணிகளை நேரடியாக பார்த்தவர்.

வாக்கு

சுதந்திர இந்தியாவின் அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் வாக்களித்தவர் என்பதுதான் மாரப்பனின் சிறப்பம்சம்.

அதாவது 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை நடந்த அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். இளைஞர்கள் பலரும் வாக்களிக்க ஆர்வம் காட்டாத நிலையில், கடந்தாண்டு இவர் நடந்தே சென்று வாக்களித்து கவனம் ஈர்த்தார்.

மாரப்ப கவுண்டர்

வருகின்றன நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வாக்களிக்க ஆர்வமாக இருந்துள்ளார். இதனிடையே வயது முதிர்வு காரணமாக அவர் திடீரென்று இறந்துவிட்டார்.

இதுகுறித்து மாரப்பனின் உறவினர்கள் கூறுகையில், “அவர் பிறந்த விவரங்களை பெற்றோர் ஓலை சுவடியில் குறித்து வைத்துள்ளனர். அதனால் வயது துல்லியமாக தெரிந்தது. ஜனநாயக கடமையில் இருந்து விலகக் கூடாது என்று எல்லோரிடமும் சொல்லுவார்.

மரணம்

உள்ளாட்சி தேர்தலையொட்டி, சில வேட்பாளர்கள் அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர். ஆனால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணமடைந்துவிட்டார்.” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.