மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக்கில் உள்ள வசதியை போல, கவர் இமேஜ்-ஐ கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக வணிக ரீதியிலான வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி, அடுத்தடுத்து பீட்டா பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயனர்களுக்கு அளித்து வருகிறது. தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?
வாட்ஸ்அப் அப்டேட்
ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பையான், பிளாக்பெரி போன்ற பெரும்பாலான இயங்குதளங்களில் இயங்கும் வகையில் வாட்ஸ்அப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக வாட்ஸ்அப் மாறியது. மல்டி டிவைஸ் சப்போர்ட், மெசேஜ் தானாக அழிந்துபோவது, ஆடியோ மெசெஜ் ப்ரீவ்யூ என புதிய புதிய அப்டேட்டுகளை நிறுவனம் பயனர்களுக்காக வெளியிட்டு வருகிறது.
செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!
இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் தளத்தில் உள்ளது போலவே கவர் இமேஜ் வசதியை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை வாட்ஸ்அப் பயன்பாடு குறித்து செய்திகள் வெளியிடும் WABetaInfo தெரிவித்துள்ளது. WABetaInfo பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டின் படி, பயனர்களின் வணிக கணக்குகளில் கேமரா பொத்தானை அறிமுகப்படுத்த WhatsApp திட்டமிட்டுள்ளது. இதில், பயனர்கள் ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய ஒன்றை அட்டைப் படமாகப் பயன்படுத்தலாம் போன்ற புதிய வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளது.
Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!
அதாவது, நம் தொடர்பில் உள்ள எந்த எண்ணிற்கும் நம் சுயவிவரப் படத்துடன், நம் அட்டைப் படத்தை இனி பார்க்க முடியும். மேலும், இந்த அட்டை படத்திற்கான கட்டுபாடுகளையும் வாட்ஸ்அப் வழங்கும் என்று நம்பப்படுகிறது. கவர் போட்டோஸை அமைக்கும் வசதி தற்போது வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வெப் காலிங் வசதி
இதற்கிடையில், வாட்ஸ்அப் எதிர்கால புதுப்பிப்பில் ‘Community’ என்ற அம்சத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ‘Community’ என்பது ஒரு தனிப்பட்ட இடமாகவும், குழு நிர்வாகிகள் வாட்ஸ்அப்பில் குழு மீது அதிக கட்டுப்பாட்டுடன் செயல்படும் விதமாக அப்டேட்கள் உருவாக்கப்பட உள்ளன. இதுவும் வாட்ஸ் அப் குரூப் சாட் போன்றது தான் என்றாலும், அட்மின்கள் நினைத்தால், வேறு குழுக்களை கூட இதனுடன் இணைத்துக்கொள்ளும் படி வசதிகள் தரப்பட உள்ளது.
iPhone SE 3: வெளியாகும் குறைந்த விலை ஐபோன் – ஐபோன் எஸ்இ 3 விலை என்ன தெரியுமா?
இதுமட்டுமில்லாமல், வாட்ஸ்அப் புதிய அழைப்பு வசதியை அறிமுகம் செய்கிறது. அதாவது வாட்ஸ்அப் செயலி மட்டுமல்லாது, வெப் தளத்திலிருந்தும் நேரடியாக குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளை பயனர்கள் மேற்கொள்ளும் வகையிலான அப்டேட்டை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது.. பேஸ்புக்கில் ஏற்கனவே இந்த அம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிண்டர் தெரியும்; அதென்ன ராயா ஆப் – பதிவுசெய்ய ஒரு லட்சம் பேர் காத்திருப்பு!